Friday, November 26, 2010

Open Source java MCA Projects

                                   http://www.javazoom.net/projects.html


JLayer 1.0 improves VBRI VBR support (average bitrate, instant bitrate, frames amount, ...). It also fixes some bugs in the decoder. Release 1.0 has been moved from GPL license to LGPL license.
It has been successfully tested under JRE 1.5 (CPU usage < 1%).

JLayer suits for J2SE platforms. JLayerME is J2ME-oriented.

Sunday, November 14, 2010

மங்காத்தாவில் லட்சுமிராயின் கவர்ச்சி ஆட்டம்!

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து வரும் மங்காத்தா படத்தில் நடிகை லட்சுமிராயின் கவர்ச்சி குத்தாட்டம் இடம்பெறுகிறதாம். நாயகியாக நடித்தாலும், ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டாலும் கவர்ச்சியாகவே நடித்து பழக்கப்பட்ட நடிகை லட்சுமிராய்க்கு அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மங்காத்தா படத்தின் நாயகி த்ரிஷாதான் என்றாலும், லட்சுமிராய்க்கும் முக்கியமான ரோலாம்.
படத்தில் லட்சுமி ராயின் கவர்ச்சி ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்கிறது மங்காத்தா குழுவின் தகவல். இந்த படத்திற்கு பின்னர் லட்சுமி ராய் தமிழ் சினிமாவில் சிறப்பாக கவனிக்கப்படுவார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Saturday, November 13, 2010

ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், டாக்சியில் பயணம் : 'காமன் மொபிலிடி கார்டு' விரைவில் அறிமுகம்


ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், டாக்சியில் பயணம் : 'காமன் மொபிலிடி கார்டு' விரைவில் அறிமுகம்



வெளிநாடுகளில் இருப்பது போல, பஸ், ரயில், மெட்ரோ ரயில், படகு, டாக்சி மற்றும் ஆட்டோவில், ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் திட்டத்தை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது, இந்தியாவில் பயணம் மேற்கொள்பவர்கள் பஸ், ரயில், படகு, மெட்ரோ ரயில், டாக்சி, ஆட்டோவில் பயணம் செய்யும்போது தனித்தனியாக கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டியுள்ளது. இதனால், நீண்ட தூரம் பயணிப்போர், ஒவ்வொரு முறை டிக்கெட் எடுக்கும் போதும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். தற்போது, பல்வேறு வெளிநாடுகளில் அனைத்து போக்குவரத்து சாதனங்களிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் முறை கடைபிடிக்கப்படுகிறது. ஹாங்காங், சிங்கப்பூர், பீஜிங், சியாட்டில், சான்பிரசான்சிஸ்கோ, ஸ்டாக்கோம், கோதன்பர்க், ரோம் ஆகிய நகரங்களில் ஒரே டிக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இங்கெல்லாம், அனைத்து போக்குவரத்து சாதனங்களிலும் பயன்படுத்தத்தக்க வகையில், 'காமன் மொபிலிடி கார்டு' முறை பின்பற்றப்படுகிறது. இந்த கார்டுகள் டெபிட் கார்டு போன்றவை, பயணம் செய்பவர் குறிப்பிட்ட அளவிற்கு பணம் செலுத்தி இந்த கார்டை பெற்றுக்கொள்ளலாம். பணம் குறைந்தால் ரீசார்ஜ் செய்தும் கொள்ள முடியும். ரயில், பஸ், மெட்ரோ ரயில், போட், டாக்சி, ஆட்டோ என, எதில் பயணம் செய்தாலும் கார்டை தேய்த்து டிக்கெட் பெறலாம். பணம் இருக்கும் பர்ஸ் போல இந்த கார்டு செயல்படுவதால், வெளிநாடுகளில் இதை, 'இ-பர்ஸ்' என்று அழைக்கின்றனர்.
இதே முறையை இந்தியாவிலும் பயன்படுத்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரகம் கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு வந்தது. தற்போது இத்திட்டம் முழுவடிவம் பெற்றுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் ஒத்துழைப்போடு இந்தியாவில், 'காமன் மொபிலிடி கார்டு' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பொருத்துதல், கார்டு வடிவமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் போக்குவரத்து கட்டணம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இந்நிலையில், ஒரே கட்டணம் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து கட்டணங்கள் சீராக இருக்கும்.
இத்திட்டம் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீண்ட தூரம் பயணம் செய்பவரின் வசதிக்காக ஒரே டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 'காமன் மொபிலிடி கார்டு' அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி விமானத்தை தவிர அனைத்து போக்குவரத்து சாதனங்களிலும் பயணம் செய்யலாம். இதற்காக, 'கார்டு ரீடிங் வேலிடேட்டர்ஸ்' எனும் கருவிகள், வாகனங்களிலும், ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களிலும், பஸ் டெப்போக்களிலும் பொருத்தப்படும். இதன்மூலம் ஒரே டிக்கெட்டில் அனைத்து வாகனங்களிலும் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்ற அரசின் பல ஆண்டு திட்டம் நிறைவேற உள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மொபைல் போன்கள் எலக்ட்ரானிக் சிப்களை பொருத்தி, அதன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யவும் வசதி செய்யப்படும். இந்த வசதியால், 'காமன் மொபிலிடி கார்டு'க்கு தேவையான பணத்தை எந்த இடத்தில் இருந்தும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 'காமன் மொபிலிடி கார்டை' பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் சுங்க வரி, கார் பார்க்கிங் கட்டணம் செலுத்தவும், ஷாப்பிங் செய்யவும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இத்திட்டத்தை டில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர், இந்தூர், போபால் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காமன் மொபிலிடி கார்டின் வடிவம், லோகோ, வண்ணம் ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தேசிய அளவிலான ஒரு போட்டி, அமைச்சகத்தின் சார்பில் மிக விரைவில் நடத்தப்படவுள்ளது. ஒரே டிக்கெட் திட்டம் அனேகமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அமைச்சக அதிகாரி கூறினார்

Sunday, October 31, 2010

MOVIES DOWNLOAD - MOVIES ONLINE - FREE LIVE FILMS

                                                                         http://www.oruwebsite.com/

Free Download High Quality Mp3 And Movies

                                           Search Amazon.com CellPhones for     http://www.majaa.net/forum.php